Wednesday 10 August 2016

‪#‎ஹைக்கூ‬ ‪#‎படிக்கட்டுகள்

கடந்த நான்கு வருடங்களாக #படிக்கட்டுகள் அமைப்பின் மூலம் 20-க்கும் மேற்பட்ட காப்பங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடந்து வந்திருக்கிறோம்.
அனைத்து குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களால்,உறவினர்களால் தனிமைப் படுத்தப்பட்டு.ஒதுக்கி வைக்கப்பட்டு, காப்பங்களில் தம் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்!
தாய்-தந்தை இழந்தோர்,கைவிடப்பட்ட குழந்தைகள், சிறைக்கைதிகளின் குழந்தைகள்,தெருவோரக் குழந்தைகள், மன-நலம் பிறழ்ந்த குழந்தைகள்,பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் என பதிவிடக் கூடாத பின்புலத்தில் இருந்து எல்லாம் இன்னும் எவ்வளவோ....
அனைவரும் குழந்தைகள் !
புன்னகை பதித்த முகங்களை மட்டுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருப்பவர்கள்!
பற்பல நல்ல உள்ளங்களின் உதவியாலும்,
அரசாங்கத்தின் சில நல்ல திட்டங்கள் மூலமாகவும்,
தன் சுயவாழ்வை துறந்து சமூகப் பணிகளில் ஈடுபடும் நிஜ சமூகசேவகர்கள் தயவிலும்,
அனைத்து குழந்தைகளும்
படிக்கிறார்கள்! மூன்று வேலையும் சாப்பிடுகிறார்கள்! பாதுகாப்பாக உணர்கிறார்கள்!
உறவாகவும்,தோழாமைக்காகவும் நிறைய்ய நிறைய்ய இளைஞர்களும், தன்னார்வலர்களும் இருக்கிறார்கள் 
விஷயத்துக்கு வருவோம் 
கடந்த நான்கு வருடங்களில்,
பயணித்து வந்த 1000 குழந்தைகளில்,
எத்தனையோ சூப்பர் சிங்கர்களையும்,கலக்கல் டான்சர்களையும் பார்த்து வந்திருக்கிறோம்!
மிமிக்ரி,ஓவியம்,தனி நடிப்பு,மைம்,ஆடல்,பாடல் என பற்பல திறமைகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் அரங்கேற்றவேளை எல்லாம் கொடையாளர்களும்,தன்னார்வலர்களும், வந்து போகும் அந்த ஒரு சில வேளைகளில் தான்!
அன்றைய தினம்,அவர்களுக்கு நம் கரகோஷங்கள் தான் உணவே!
ஓப்பனாகவே சொல்கிறோம்...
"என் பையனையும் யோகா கிளாஸ் அனுப்புறேன்..ஒண்ணும் சரி வரல.."
"என் பொண்ணும் டான்ஸ்கிளாஸ் போறா...எக்ஸ்ப்ரெஷன் கூட வரல"
ஆனா இந்த அனாதை ஆசிரமத்துல இருக்குற புள்ளைங்களை பாரேன்" என பொறமை கூட கொண்டார்கள் வந்து போன சிலர்..
அப்பொழுது தட்டியது இந்த ஐடியா!
சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த காப்பக குழந்தைகளின் தனித் திறமைகள் எல்லாருக்கும் தெரியட்டுமே!
வசதி படைத்தவர்களுக்கும், சூப்பர் சிங்கர்களுக்கும்,சன் சிங்கர்களுக்கும் மட்டும் தான் மேடையா ? பாராட்டா ? பரிசா ?
காப்பங்களில் வளர்க்கப்பட்ட குழந்தைகளும் எதற்கும் சலித்தவர் இல்லை என உலகம் அறிய, ஊர் அறிய
அனைத்து நண்பர்கள் உதவியுடன்
#படிக்கட்டுகள்
கொண்டாடுகிறது
#ஹைக்கூ - காப்பக குழந்தைகளின் கலைநிகழ்ச்சி
‪#‎மதுரையில்‬ ‪#‎ஆகஸ்ட்13‬ ‪#‎சனிக்கிழமை_மாலை‬
ஆதரவற்றோரை அரவணைப்போம்!!!  கொண்டாடுவோம்!!!உயர்த்துவோம் 

No comments:

Post a Comment