Monday 26 November 2012

படிக்கட்டுகள் அமைப்பு மூலமாக என்ன செய்யப்போகிறோம் ?



Join in Our Students Community and Help the Needy's
படிக்கட்டுகள் அமைப்பு மூலமாக என்ன செய்யப்போகிறோம் ?

  • ஆதரவற்றோர் இல்லங்களில்,காப்பகங்களில்,முதியோர் இல்லங்களில்,மன நல காப்பகங்களில்,சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகள் மற்றும் பண உதவியோ,பொருளுதவியோ அளித்தல்...
  • ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குதல்,கல்வி உபகரணங்கள் வழங்குதல்,படிக்க வசதி இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளை படிக்க வைத்தல்..
  • நகர்ப்புற,கிராமபுற அரசு மாநகராட்சி பள்ளிகளிலும்,தனியார் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,போட்டிகள்,ஆலோசனைகள்,கலந்தாய்வு கூட்டங்கள்,இன்ன பிற கல்வி கற்பித்தல் உதவிகள் வழங்குதல்..
  • பண்டிகை நாட்களில்,தேசிய தலைவர்களின் பிறந்தநாட்களில்,நினைவு நாட்களில்,மற்றும் சில முக்கியமான நாட்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று,இனிப்புகள் வழங்கி அவர்களோடு நேரம் செலவழித்தல் மற்றும் ஒரு வேளை/இரு வேளை உணவு வழங்குதல்..
  • வறுமையில் வாடுவோருக்கு சிகிச்சைக்காக மருத்துவ உதவி அளித்தல்..குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுதல்
  • தனியார் சேவை அமைப்புகளோடு சேர்ந்து இரத்ததானம் செய்தல்,கல்லூரிகளில் இரத்த தான முகாம் நடத்தி,நம் மெம்பர்களை,பங்குபெறச் செய்து இரத்தம் தேவைப்படும் நேரங்களில் எளிதாக இரத்தம் கிடைக்க பெற செய்தல்.
  • பொது நிகழ்ச்சிகள் நடத்தி கிடைக்கும் நன்கொடையில் ஸ்பான்சர்ஷிப் பணத்தில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான உதவிகள் செய்தல்.
  • மனநலம் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்கள் கற்பித்தல்,பாடங்கள் சொல்லி கொடுத்தல்,ஸ்போர்ட்ஸ்,டான்ஸ் என பிற கலைகள் கற்பித்தல்,அவர்களை போட்டிகளில் பங்குபெற செய்தல்
  • பார்வையற்றோருக்கு இலவசமாக தேர்வு எழுதி தருதல்,ஊனமுற்றவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள்,உபகரணங்கள் தருதல்,ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுதல்..
  • சமூகப்பணிகள்,களப்பணிகளில் ஈடுபடுதல்,மக்கள் நண்பனாக அவர்களுக்கு உதவுதல்..
  • மொத்தத்தில் “ஆதரவற்றோர்” என்ற சொல்லை “ஆதரவு உள்ளோர்” என மாற்றுவதற்கான முயற்சியே இந்த படிக்கட்டுகள்..

படிக்கட்டுகளில் இணைய     http://padikkattugal.org/register/

  mail us at padikkattugal@gmail.com

(கல்லூரி மாணவர்கள் சந்தா தர தேவை இல்லை! ஆனால் மாணவர்கள் மேற்சொன்ன சேவைப்பணிகள்/களப்பணிகள்  செய்ய வேண்டி இருக்கும்! ட்ரஸ்ட்டின் பக்க பலமே படிக்கும் மாணவர்கள் தான்..
மாணவர்கள் ரிஜிஸ்டர் செய்யும்போது  VOLUNTEER என்பதை தேர்வு செய்யவும்.. 

பணியில் இருப்பவர்கள் மாதம் குறைந்தபட்சம்  100 செலுத்த வேண்டும்! நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டப்படும்..ஆடிட்டிங் விவரங்கள் மெயில்,எஸ்.எம்.எஸ்,வெப்சைட்,பேஸ்புக் க்ரூப்பில் பதிவேற்றம் செய்யப்படும்!12A,80-G சர்டிபிகேட் மூலம் நீங்கள் வரி விலக்கும் பெற்று கொள்ளலாம்! தங்களின் ஒவ்வொரு ரூபாயும் எங்கோ முகம் தெரியாத ஒரு ஆதரவற்றோர்க்கு தான் பயன் பெறும்!

பணியில் இருப்பவர்கள் ரிஜிஸ்டர் செய்யும்போது  MEMBER என்பதை தேர்வு செய்யவும்..

பணம் தர இயலாது! முடிந்தால் தருகிறேன்..ஆனால் சேவை செய்ய விருப்பம் உண்டு என்று நினைப்பவர்களும் தாரளமாக இலவசமாக இதில் இணையலாம்..) 


1 comment:

  1. I joined.. Nice Job by Today's Students Community

    ReplyDelete