Wednesday 28 November 2012

அன்பு வழியும் அன்பகம்



படிக்கட்டுகளின் முதல் படி கட்டமைக்கப்பட்டது அன்பகத்தில் தான்! 

அன்பகம் பெயரிலேயே அன்பு சொட்ட கனிந்து இருக்கும் இந்த இடத்தில் நிஜத்திலும் அன்பு வழியும்! மன நலம் பிறழ்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பள்ளி இது..

பெயரளவில் மட்டுமே பொது சமூகத்தில் இவர்கள் மன நலம் குன்றியோர்,பிறழ்ந்தோர்  என  அழைக்கப்பட்டாலும் நிஜத்தில் மன நலம் குன்றி கிடப்போர் நாம் மட்டுமே!
 நாம் யாரேனும் வீட்டிற்கு யாரவது விருந்தாளி  வந்தால்,இரு கை கூப்பி வரவேற்போமா ? அவர்களுக்கு சலாமிட்டு மரியாதை செய்வோமா ? நம் உடன் பிறந்தவர்களை அண்ணன்,அக்கா,என வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுப்போமா ? சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வாயில்லா ஜீவன் நம் அருகே வந்தால் நமக்கு கல் எடுத்து அதை விரட்ட தான் தெரியும்! அதையும் அரவணைத்து அதற்கும் சோறு ஊட்ட இவர்களுக்கு மட்டுமே தெரியும்!

இந்த செயற்கரிய செயல்களை செய்வதனால் தானோ சமூகத்தில் இவர்களுக்கு இந்த மனநலம் குன்றியோர் பட்டம்..
அப்படியானால் நமக்கு மனதை புதைத்தோர் பட்டமா ?

இன்றில் இருந்து இவர்களையும் நம் சகோதர சகோதரி போல் நினைத்து மதிப்போம்! விடுமுறை மற்றும் ஒய்வு நாட்களில் இவர்களுடன் நேரம் செலவிடுவோம்!

நமது படிக்கட்டுகள் மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக அன்பகத்தை தத்தெடுத்து அவர்களுக்கு ஆடல்,பாடல் கலைகளை கற்று தந்திருக்கிறோம்! சமீபத்தில் கூட,மணி என்ற சிறுவன் மாநில அளவில் நடைபெற்ற நடனபோட்டியில் இரண்டாம் பரிசு தட்டி சென்றான்!

அந்த பரிசை விட,அவன் வெற்றி களிப்பை விட  நாம் வாழ்வில் அடைய இனி என்ன சுகம் இருக்க போகிறது ?

No comments:

Post a Comment